நீ வருவாய் என

நீ வருவாய் என!… பகுதி1

NVEஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.. நா தான் உங்க ஜெ.. மீண்டும் நீ வருவாய் என!… கதை மூலமா உங்கள சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி… நீங்க நம்ம பேஜ் ல உள்ள மத்த கதைகள் எல்லாத்தையும் படிச்சி ரசிச்சிருபீங்க நு நெனைக்கிறேன்.. இந்த கதை முற்றிலும் அதிலிருந்து மாறுபட்டது… இது நா காலேஜ் படிக்கிற நேரத்துல நடந்த கதை.. ரொம்ப நீலமா லாம் போகிறது சின்ன கதை தான்.. ஆனா ரொம்ப என்னோட மனச பாதிச்ச இன்சிடெண்ட்.. இது நடந்து 7 வருஷம் ஆச்சு இன்னும் ஆனா அத என்னால மறக்க முடியல… சோ இப்ப அத நா உங்க கிட்ட ஷேர் பண்ண போறேன்.. வாங்க நம்ம கதைக்கு போகலாம்…

அப்போ எனக்கு வயசு 17 நடந்துட்டு இருந்துச்சி.. காலேஜ் முதல் வருஷம் படிச்சேன்… எங்க ஊரு ஒரு கிராமம் நு உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. எங்க ஊர்ல இருந்து காலேஜ் கு போகுறதுக்கு நா 2 பஸ் மாறி தான் போகணும்.. என்னோட காலேஜ் டைமிங் 8 டு 1.. சோ நா ஒரு 6 மணிக்கு பஸ் ஏறினாத்தான் காலேஜ் கு ஒரு 7.30 க்குலாம் போக முடியும்.. எங்க ஊர்ல இருந்து நாங்க ஒரு செட் ஆ தான் காலேஜ் போய் சேந்தோம்.. பசங்க 6 பேரு பொண்ணுங்க 2 பேரு.. முதல் வருஷம் படிக்கும் போது எல்லாருமே ஒன்னாத்தான் பஸ் ல போவோம் அதே மாதிரி திரும்பி வரும் போதும் ஒன்னாவே தான் வருவோம்.. எங்க ஊர்ல இருந்து எங்க மாவட்ட பேருந்து நிலையம் போறதுக்கு ஒரு பஸ்.. அதுல இருந்து காலேஜ் க்கு இன்னொரு பஸ்..

எங்க ஊர்ல இருந்து காலைல 6 மணிக்கு பஸ் புறப்படும்.. சோ நா 5 மணிக்குலாம் எழுந்து குளிச்சி ரெடி ஆகி 5.50 க்கு பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துருவேன்.. சில நேரத்துல பஸ் சீக்கிரம் வந்துரும் சில நேரத்துல லேட் ஆகும்.. சோ கொஞ்சம் முன்னாடியே போய் நிக்கிறது நல்லதுன்னு நெனைச்சிட்டு நா சீக்கிரமாவே போயிருவேன்.. ஒரு நாளும் பஸ் மிஸ் பண்ற பழக்கமே கிடையாது ஒரு வேலை பஸ் ரிப்பேர் ஆனா தான் மிஸ் ஆகும்..

அந்த பஸ் கிட்ட தட்ட அதிகாலைல இருந்து 3 ஆவது பஸ்.. அதுனால மார்க்கெட் போய் காய்கறி வாங்குறவங்க சந்தைக்கு தங்களோட காய்கறிகள் விக்க போறவங்க.. வெளியூர் போறவங்க எல்லாரோட டார்கெட் அந்த பஸ் தான்.. அதுனால டெய்லி செம்ம கூட்டம் இருக்கும்.. சில நேரத்துல என்ன பல நேரத்துல உக்கார சீட் கிடைக்குறதே கஷ்டம் தான்.. அதுலயும் செவ்வாய் கிழமை ஆனா சொல்லவே வேண்டாம் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஆட்டையும் பஸ் ல ஏத்திருவாங்க.. சந்தைல கொண்டு போய் விக்க போறவங்க.. ஆக மொத்தம் பஸ் பாரதி ராஜா படத்துல காமிக்கிற பஸ் மாதிரி தான் இருக்கும்.. வேற வளி இல்ல இதுக்கு அப்புறம் 6.30 ஒரு பஸ் உண்டு அது சரியான நேரத்துக்கு வராது.. சோ அந்த 6.30 பஸ் ல போன காலேஜ் க்கு போன மாதிரி தான்..நாங்க ஒரு நாளும் 6.30 பஸ்ல போறது கிடையாது..

அந்த பஸ் ல ரெகுலர் ஆ போறதால அதுல வர டிரைவர் கண்டக்டர் நல்ல பழக்கம்.. அதுலயும் குமரேசன் நு ஒரு கண்டக்டர் வாருவார் பாருங்க அவர் செம்ம டைப்.. என்ன மாப்ள மாப்ள நு தான் கூப்பிடுவார்… என்ன போலவே என் கூட வர என்னோட பிரெண்ட்ஸ் கூடையும் நல்ல பழகுவார்.. அவர மாதிரி ஒரு ஜாலியான ஆள பாக்குறது ரொம்ப கஷ்டம்.. எனக்கும் அவர ரொம்ப பிடிக்கும்.. சில நேரத்துல அவர் பஸ் ல வரலன அவரையே கண் தேடும்.. அந்த அளவுக்கு அவர் மீது பாசம்..

சரி மாமா மாமா நு சொல்றேன்.. அவரு எப்படி இருப்பர்னு சொன்னத்தனே உங்களால கற்பனை பண்ணி பாக்க முடியும்.. இதோ அவர பத்தி சொல்லிருதேன்..குமரேசன் மாமா நல்ல கலர்.. ஆள் ஒரு 5.8′ உயரம் இருப்பார்.. ரொம்ப குண்டும் கிடையாது ஒல்லியும் கிடையாது தானமான உடம்பு.. ஒரு முக்கியமான விஷயம் அவருக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருக்காங்க அவங்களுக்கு என்னைவிட வயசு அதிகம் இருக்கும்.. ஆனா குமரேசன் மாமாவுக்கு வயசு கம்மி தான் எப்புடின்னு கேக்குரீங்களா.. அவர் 13 வயசுலேயே ஒரு பொண்ண இழுத்துட்டு ஓடி போய் கல்யணம் பண்ணிகிட்டார்.. சோ 35 வயசுலேயே 20 வயசு பசங்க.. ஆனா அவர பாத்தா ஒரு 30 வயசுக்குள்ள தான் மதிக்க முடியும் எங் ஆஹ் தான் இருப்பார்..(கல்யாணம் ஆனா ஒருத்தர சைட் அடிகிறேனு நோ பட் வோர்ட்ஸ்.. கதைய முழுசா படிச்ச அப்றமா திட்டுங்க..)

ஒரு நாள் காலைல ஊர்ல நல்ல மழை.. அதுனால என் கூட வர மத்த பாய்ஸ் வரல தூங்கிட்டனுங்க நு நெனைக்கிறேன்.. அப்பம்லாம் என் கிட்ட போன் கிடையாது.. எதாவது வேனும்ன அவங்க அவங்க வீட்டுக்கு போய் தான் கேக்கணும்.. சோ காலைல யார் வீட்டுக்கு போக.. நா மட்டும் தனியா காலேஜ் கு கெளம்பி போயிட்டேன்.. பஸ் ஸ்டாண்ட்ல கொடைய புடிச்சிட்டு நின்னுட்டு இருந்தேன்.. 6 மணி ஆகிடுச்சி ஆனா பஸ் இன்னும் வரல.. அய்யயோ இன்னைக்கி காலைல எழுந்து குளிச்சி வந்ததுலம் வேஸ்ட் ஆயிரமோ நு மனசுக்குள் ஒரே பயம்.. மழை வேற பேயுது.. எனக்கு குளிர் ல கை கால் லாம் கிடு கிடு நு ஆடுது.. நா பஸ் வர திசைய நோக்கி பாத்துகிட்டே இருந்தேன்.. பஸ் தான் வரல என்னோட பிரெண்ட்ஸ் வருவாங்கன்னு பாத்தா அவனுகளும் வரல.. ஒரு வழியா பஸ் 15 நிமிஷம் லேட் ஆ வந்துச்சி.. அன்னைக்கி வழக்கமா வேற கண்டக்டர் வருவார் அவர் வரல.. அவருக்கு பதிலா குமரேசன் மாமா தான் வந்தார்.. அவர பாத்ததும் எனக்கு ஒரே சந்தோசம்.. அப்பாட இன்னைக்கி பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சாச்சி அப்டின்னு மனசுக்கு நேனைச்சிகிட்டே பஸ் ஆ பாத்தேன்.. பஸ் உள்ள செம்ம கூட்டம்..

நிக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம்.. அங்கும் இங்குமா நெளிஞ்சிகிட்டே நின்னேன்.. குமரேசன் மாமா முன்னாடி இருந்து டிக்கெட் போட்டுகிட்டே வந்தார்.. அய்யா கொஞ்சம் தள்ளி நின்னுங்க படில நிக்கிறவங்க உள்ள வர வேண்டாமா வழி விட்டு நில்லுங்கனு சொல்லி எல்லாரையும் திட்டிகிட்டே வந்தார்.. அப்பவே தெரிஞ்சிகிட்டேன் பார்ட்டி செம்ம காண்ட் ஆ இருக்குனு.. அவர் பின்னாடி வந்ததும் நா 6.50 பைசா கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினேன்.. அவர் டிக்கெட் கொடுத்து முடிச்சிட்டு இன்வைஸ் போட்டுட்டு இருந்தார்.. நா மெல்லமா அவர் கிட்ட பேச்சு கொடுத்தேன்..

மாமா!….
என்ன மாப்ள சொல்லு.. நிக்க இடம் இருக்க இல்லையா??.. நு அவர் கேக்க.. நீங்க பாத்துகிட்டு தானே இருக்கீங்க 2 கால்லையும் 2 பேரு நிக்கிறாங்க.. ஒரு வழியா கொண்டு போய் சேத்தா சரி தான் இன்னு நா சொன்னேன்.. அவருக்கு குபீர்னு ஒரு சிரிப்பு.. சிரிச்சிகிட்டே என்னோட கன்னத்த கிள்ளினார்.. சமத்து குட்டி ..

சரி உன் கூட வர ஒசாமா பின்லேடன் க்ரூப்ஸ் எங்க .. இன்னைக்கி காணல?? மழை நால தூங்கிட்டு இருப்பாங்கனு நெனைக்கிறேன் மாமான்னு நா சொன்னேன்…

உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு போல.. என்னோட சீட் ல உக்கந்துருகிறவன் இன்னும் 2 ஸ்டாப் ல இறங்கிருவான்.. அப்போ நீ அதுல உக்காந்துக்கோ.. சரி யா நு சொல்லிட்டே மறுபடியும் என்னோட கன்னத்த கிள்ளினார்.. எனக்கு அப்ப கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி..
ஒரு வழிய அந்த கண்டக்டர் சீட் ல இருந்த ஆள் இறங்கிட்டார்.. இப்ப அந்த சீட் ல நா உக்காந்துகிட்டேன்.. இப்பதான் பா கொஞ்சம் மூச்சு விட முடியுது.. மாமா மறுபடியும் முன்னாடி போய் டிக்கெட் போடா போய்ட்டார்.. டிக்கெட் போட்டுட்டு பின்னாடி வந்து என்னோட பக்கத்துல நின்னார்…

(தொடரும்)
இத படிக்கும் போது எப்படி பீல் பண்றீங்கன்னு கண்டிப்பாக கீழே கமெண்ட் செய்யவும்..

Leave a comment