கண்டக்டர் சீட் ல 2 பேரு உக்காரலாம்.. அதுல நானும் இன்னொருத்தரும் உக்காந்திருந்தோம்.. டிக்கெட் எல்லாமே போட்டு முடிச்சிட்டு என் பக்கத்துல வந்து நின்ன குமரேசன் மாமா உக்கார எதிர் பார்த்து இருந்தார்.. அப்போ அவர பாத்த நான் நீங்க வென இருங்க மாமா நு சொன்னேன்.. அதுக்கு அவர் இல்ல நீ உக்காரு உன் பக்கத்துல இருக்குற ஆள் இப்ப இறங்கிருவான் அதுகப்ரம் நா உக்கருதேன்னு சொன்னார்.. சரி மாமா நு சொல்லிட்டு ந பேசாம இருந்தேன்.. ஒரு 2 நிமிஷத்துல என் பக்கத்துல உள்ள ஆள் இறங்குற இடம் வந்துச்சி.. அந்த ஆளும் இறங்கிட்டார்..அப்றமா குமரேசன் மாம்ஸ் என் பக்கத்துல வந்து உக்காந்தார்..
அவர் கிட்ட நானா பேச்சு குடுத்தேன்.. என் இன்னைக்கி இவ்ளோ கூட்டம்.. மத்த நாள்ல இவ்ளோ கூட்டம் இருக்காதே… அதுக்கு அவர் சொன்னார் இன்னைக்கி காலைல பஸ் ரிப்பேர் ஆகிட்டு அதுனால லேட் ஆ வந்துச்சா கூட்டம் நெறைய ஆகிட்டு.. அப்றமா அவர் என் கிட்ட என்னோட பாமிலி பத்தி கேட்டு தெரிஞ்சிகிட்டார்.. தன்னோட பாமிலி பத்தியும் சொன்னார்..ஒரு வழியா பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு.. நா போயிட்டு வரேன் மாமா நு அவர் கிட்ட சொல்லிட்டு கெளம்பிட்டேன்.. காலேஜ் போய் ஒழுங்கா படி.. தின்னுகிட்டே இருக்காத சோத்து சட்டி நு அவர் சொல்ல.. உங்களுக்கு வேற வேலையே இல்ல நு சொல்லிட்டு கெளம்புனேன்.. அன்னில இருந்து நாங்க 2 பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்…
அப்பரம் ஒவ்வொரு நாளும் பஸ் ல போகும் போதும் குமரேசன் மாம்ஸ் கூட ஒரே அரட்டை தான்.. நல்ல ஜாலியா போயிட்டு இருந்துச்சி.. அதனாலையோ என்னவோ சில நேரத்துல மாம்ஸ் வரலனா ரொம்ப போர் அடிக்கும்..
இதே மாதிரி ஒரு நாள் பஸ் லேட் ஆ வந்துச்சி..அன்னைக்கும் பஸ் ல செம்ம கூட்டம்.. ஒரு வேல பஸ் ல குமரேசன் மாமா தான் கண்டக்டர் ஆஹ் இருப்பரோனு பாத்தேன்.. அவர் அன்னைக்கி வரல இன்னொருத்தர் தான் வந்துருந்தார்.. இட்ஸ் ஓகே இன்னு நெனைச்சிட்டு நின்னுட்டு இருந்தேன்.. நா பஸ் ல நிக்கும் போது சும்மா நிக்க மாட்டேன் அங்க இங்கனு பறக்க பாத்துட்டே தான் இருப்பேன்.. அப்டி பாக்குற சமயத்துல ஒருத்தன் காக்கி கலர் டிரஸ் போட்டுட்டு கண்டக்டர் சீட் ல உக்காந்து இருந்தான்.. என்னடா இது ஒரு பஸ் க்கு 2 கண்டக்டர் ஆ.. ரொம்ப கொழப்பமா இருந்துச்சி.. அன்னைக்கி வந்த கண்டக்டர் டிக்கெட் லாம் போட்டுட்டு அவரோட சீட் ல போய் உக்காந்தார் அப்போம் அந்த சீட் ல இருந்த அந்த பய்யன் கிட்ட பேசிகிட்டு இருந்தார்.. “பாத்தீங்களா எவ்வளவு கூட்டம்.. இத சமாளிக்கிரதுக்கே தனியா சாப்டனும்.. இன்னொரு பஸ் விட சொன்ன விட மாட்டுகாங்க”…. அப்டின்னு பேசிகிட்டு இருந்தார்.. அதுக்கு அந்த சீட் ல இருந்தவன் லைட் ஆ சிரிச்சிட்டே தலைய ஆடிகிட்டு கேட்டுட்டு இருந்தான்.. சரி ஒரு வேல வேற பஸ் க்கு போற டிரைவர் இல்லனா கண்டக்டர் ஆ இருக்கும்னு நெனைச்சிகிட்டேன்..
ரோடு வேற சரி கிடையாது.. ஒவ்வொரு டைம் பஸ் பிரேக் போடும் போதும் கீழையும் மேலயும் தூக்கி போடும்.. எனக்கு நிக்கிரதுக்கே கஷ்டமா இருந்துச்சி.. அப்போம் நா மறுபடியும் அந்த சைடு திரும்பும் போது அந்த பய்யன் என் கண்ணுல பட்டான்.. அப்பத்தான் அவன நா நல்ல பாத்தேன்..
வாவ் நா அசந்து போயிட்டேன் அவன திரும்ப திரும்ப பாக்கணும் போலவே இருந்துச்சி.. அது என்ன மாயமோ தெரியல அன்னைக்கி பஸ் ல இருந்த டைம் புல்லா அவனையே திரும்ப திரும்ப பாத்துட்டு இருந்தேன்.. ஆனா அவன் என்ன பாக்கவே இல்ல .அவன கொஞ்சம் உத்து பாத்தாலே உங்களுக்கு அவன பிடிக்கும்.. ஆள் அப்படி ஒரு அழகுளாம் கிடையாது.. ஆனா பாக்க நல்லா இருப்பன்.. முக ஜாடை பத்தி சொல்லனும்னா கிட்ட தட்ட டோனி மாதிரி இருப்பன் ஆனா டோனிய விட கொஞ்சம் கலர் கம்மி.. கிட்ட தட்ட ஒரு 5.6 உயரம்.. ஒல்லியான தேகம் தான்… அவன் அந்த கண்டக்டர் கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போது பிச்சி பூக்கள் பூத்து குலுங்குவது போல எனக்கு தோணுச்சி.. அவன பாத்ததுல இருந்து நா அன்னிக்கி பூரா என்னையே மறந்துட்டேன்… கூர்மையான மூக்கு கொஞ்சம் கருப்பா இருந்தாலும் சின்னதா அழகான உதடு.. சும்மர் கட்டிங் போட்ட ஒரு 3 வாரம் அவனோட அழகான முடி.. இதெல்லாமே அழகுக்கு அழகு சேத்தன… நேத்து வர குமரேசன் மாமா தான் ஹீரோ நு நெனைச்சிட்டு இருந்தவங்களுக்கு ஒரு சின்ன ஷாக்.. ஹீரோ இந்த பய்யன் தான்..
அவன் யாரு எந்த ஊரு காரன் டெய்லி இதே பஸ் ல தான் வருவானா அப்டின்னு எந்த ஒரு விவரமும் தெரியாது இருந்தாலும் மனசு அவனையே சுத்தி சுத்தி வந்துச்சி.. ஆனா மூளை இதெல்லாம் செட் ஆகாது வீனா டைம் வேஸ்ட் பன்னதனு சொல்லுச்சி.. நா எத கேக்க பிரெண்ட்ஸ்..
சரி அவன் எந்த ஊர்ல பஸ் ஏறுதான்னு தெரியாது அட்லீஸ்ட் எங்க இறங்குரான்னு தெரிஞ்சி வச்சிக்கலாம்னு அவனையே நோட்டம் விட்டுட்டு இருந்தேன்.. எங்க மாவட்ட பஸ் ஸ்டாண்ட்க்கு முன்னாடி உள்ள ஸ்டாப் பி-காலனி அந்த ஸ்டாப் ல தான் அவன் இறங்குனான்.. அவன் இருக்குற வரை என்னோட மனசும் சரி கண்களும் சரி வானத்தில் பறக்கிற பறவைகள் போல ஓடி ஆடிகிட்டு இருந்தது.. அவன் போன பின்பு அனைத்துமே அடங்கி ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டன..
காலேஜ் போய் கிளாஸ் ல உக்காந்த பாடம் எதையுமே கவனிக்க முடியல எத பத்தி நெனைச்சாலும் அவன் அழகாக சிரிச்சி சிரிச்சி பேசிய நினைவலைகள் தான் மனசுல அடிச்சிட்டு இருந்தது… மனசுக்குல அவன் கிட்ட எப்படி பேசலாம் என்று ஒவ்வொரு ஐடியா வா தோணுச்சி..இதுக்குலாம் மேல அவன் டெய்லி நம்ம பஸ் ல தான் வருவானா இல்ல இன்னைக்கி மட்டும் தான் வருவானா ??? இது போல 1008 கேள்விகள் மனசுக்குள்ள…
ஒரே நாள்ல அவன் என்ன என்ன செஞ்சான்.. நா ஏன் இப்படி அவன பத்தியே நெனைச்சிட்டு இருக்கேன்.. அவன் என்னோட முகத்த ஏறெடுத்து கூட பாக்கள.. நா தான் பலமுறை அவன பாத்தேன்.. இத தான் பாத்தவுடன் பத்திகிரதுன்னு சொல்லுவாங்களா…
சரி ஓகே நாளைக்கு ஒரு வேல அவன் பஸ் ல வந்தான்னா அவன் கிட்ட எப்படியாவது பேசிற வேண்டியாதான்!……..
(தொடரும்)
இத படிக்கும் போது எப்படி பீல் பண்றீங்கன்னு கண்டிப்பாக கீழே கமெண்ட் செய்யவும்..