அன்னைக்கி காலேஜ் முடிஞ்சிது.. பஸ் ஸ்டாண்ட்ல எங்க ஊருக்கு போற பஸ்ல ஏறி உக்காந்துருந்தேன்.. அந்த பஸ் மதியம் 1.45 க்கு பஸ் ஸ்டாண்ட் ல இருந்து கெளம்பும்… அதுக்கு முன்னாடி 1.20 க்கு ஒரு பஸ் உண்டு.. அந்த பஸ் அப்பத்தான் கெளம்பி வெளிய போச்சு.. ஓடி போய் எரிருந்த அந்த பஸ்ஸ புடிச்சிருக்கலாம் ஆனா நா போகல.. நா இந்த 1.45 பஸ் லையே உக்காந்துருந்தேன்.. எப்பவும் போல நா பறக்க பாத்துட்டு இருந்தேன்.. அங்க ஒரு பய்யன் அந்த 1.20 பஸ்ஸ பிடிக்க ஓடுறான்.. காக்கி கலர் டிரஸ் வேற போட்ருக்கான்.. யாருடா அதுன்னு உத்து பாத்தா நம்ம ஹீரோ.. ச்ச்ச ஒழுங்கா அந்த பஸ் ல ஏறி போயிருந்தா இந்த நேரத்துக்கு அவன் கூட எப்படியாவது பேசிருக்கலாம்.. என்ன ஜே இப்படி கிடச்ச சான்ஸ் அஹ மிஸ் பண்ணிட்டியே.. இதுகப்ரம் சான்ஸ் எப்ப கிடைக்குமோ…. ஆனா அந்த நேரத்துல ஒன்னு மட்டும் கன்பார்ம் ஆச்சு.. அவன் நம்ம ஊருக்கு பக்கத்துல இருக்குற ஊர் காரன்தான்.. அது வர ஹாப்பி.. சரி நாளைக்கு எப்படியாவது அந்த 1.20 பஸ்ஸ புடிச்சிர வேண்டியதான்.. டெய்லி அவன் அதுல தான் போறான் போலிருக்கு நு மனசுல நெனைச்சிகிட்டேன்.. பஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சி.. ஒரு வழியா ஊருக்கு வந்துட்டேன்..
எங்க போனாலும் யார பாத்தாலும் அவனோட நெனைப்பாவே இருந்துச்சி.. அவனோட முகத்த விட அவனோட ஹேர் ஸ்டைல் அண்ட் பின் மண்டை தான் எனக்கு நல்ல நியாபகம் இருந்துச்சி.. எங்க ஊர்ல RKS அப்டின்னு ஒரு பஸ் ஓடிட்டு இருந்துச்சி.. அது ஒரு நாளைக்கு 3 முறை எங்க ஊருக்கு வரும்.. ஈவெனிங்க் டைம் அந்த பஸ் வரும் போது நா வீட்டுக்கு சாமான் வாங்குறதுக்காக கடைக்கு போயிருந்தேன்.. அப்போ அந்த பஸ் ல ஒரு டிரைவர பாத்தேன்.. ஆளு கலர் பாடி எல்லாமே அந்தே ஹீரோ மாதிரியே தான் இருந்தார்.. நா முகத்த சரியா பாக்கல.. பின் மண்டைய மட்டும் தான் பாத்தேன்… அந்த டிரைவர் அவன மாதிரியே இருந்தார்.. எனக்கு மனசுல ஒரு சின்ன சந்தோசம்.. வாவ் இவன் நம்ம ரூட் ல தான் டிரைவ் பண்றான்.. எப்படியாவது அவன் கிட்ட நம்ம லவ் அஹ சொல்லிடலாம்னு மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன..
அந்த பஸ் கெளம்பி போயிட்டு நா அவன போய் முழுசா பாக்க முடியல.. இன்னும் 1.30 மணி நேரம் கழிச்சி அந்த பஸ் நம்ம ஊருக்கு திரும்பி வரும் அப்பம் எப்படியாவது அவன பாத்துர வேண்டியதான்.. வேகமா வீட்ட நோக்கி நடந்தேன்.. வீட்ல வேற எதாவது வேலை இருக்கணு கேட்டு கேட்டு பண்ணுனேன்.. என்ன திரும்ப அந்த பஸ் வருகிற நேரத்துல இவங்க என்னைய வேற எங்கயாவது அனுப்பிற கூடாது.. அதுனாலத்தான்… கடிகாரத்தையே பாத்துட்டு இருந்தேன்..மணி 6 ஆச்சு.. அந்த பஸ் 6.45 க்கு தான் வரும்.. இன்னும் 45 மினிட்ஸ் இருக்கு.. ஒரு நிமிஷம் போறது கூட ஒரு வருஷம் போல இருக்கு… எப்படியோ 15 மினிட்ஸ் போச்சு இன்னும் 30 மினிட்ஸ் இருக்கு.. இப்பவே கெளம்பி பஸ் ஸ்டாண்ட் போவோம்னு கெளம்பினேன்.. பஸ் ஸ்டாண்ட் போய் அந்த பஸ் வந்து நிக்கிற இடத்துல கரெக்ட் அஹ நின்னேன்.. நேரம் போகவே மாட்டுக்கு.. கை கால்லாம் பட படன்னு இருக்குது.. என்னனே தெரியல.. அந்த பஸ் ல வர டிரைவர் அவன் தானனே தெரியல இருந்தாலும் அவன பாக்குற ஆர்வத்துல ந என்னலாமா பண்ணிட்டு இருந்தேன்..
ஒரு வழிய 6.45 ஆகிட்டு.. ஆனா பஸ் இன்னுமும் வரல என்ன கடவுளே இது மத்த நாள்லாம் ஒழுங்கா வர பஸ் இன்னைக்கி நா வெயிட் பண்றேன்னு தெரிஞ்சே வரலையா??.. ஒரு 10 நிமிஷம் கழிச்சி பஸ் வந்தது.. ஆர்வமா ஓடி போய் டிரைவர் சீட் ஆ பாத்தேன்.. எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.. அந்த டிரைவர் பக்க என்னோட ஆளு ஜாடைக்கு இருக்கனே தவிர இவன் அவன் இல்ல.. அவன நா தனிய சந்திக்கிற நேரம் கிடைக்காத?? இந்த முறையும் என்னோட காதல் தோல்வி தான் அடையுமா?? இதே மாதிரி ஏகப்பட்ட கேள்விகள்.. எனக்கு கையும் உடலை காலும் உடலை.. அப்டியே ஒரு இடத்துல நின்னுட்டேன். எனக்கு ஒரு மாதிரி வெக்ஸ் ஆகிடுச்சி என்னடா இது இவ்ளோ நேரம் வெயிட் பண்ணி வேஸ்ட் ஆ போச்சே நு.. சரி பரவா இல்ல நாளைக்கி பஸ்ல வருவான் எப்படியாவது அங்க வச்சி அவன் கிட்ட பேசிற வேண்டியதான்…
அன்னைக்கி நைட் பூர அவன பத்தியே நெனைச்சிட்டு இருந்தேன்..மறுநாள் காலைல பஸ் வந்துச்சி.. பஸ் ல ஏறும் முன்னவே அவன கண்டக்டர் சீட் ல பாத்தேன் ஆள காணல.. ஓஹ் மை காட்.. அவ்ளோ தான் என்னோட லவ் இந்த முறையும் காத்துல பறந்து போச்சு நு நெனைச்சிகிட்டே பஸ் உள்ள ஏறினேன்.. ரெகுலர் ஆ வர பஸ் ரிப்பேர் போல இன்னைக்கி வேற பஸ் வந்துருக்கு.. உள்ள பாத்தா கண்டக்டர் நம்ம குமரேசன் மாமா!… வாவ் சாட் ஆ போன எனக்கு ஒரு ஜாலி அஹ் இருந்துச்சி.. எப்பவும் போல உக்கார இடம் இல்லாம எல்லாரும் நின்னுகிட்டே இருந்தோம்.. குமரேசன் மாமா எப்பவும் போல டிக்கெட் போட்டுட்டு இருந்தார்.. நா அவரோட சீட் ல உக்காந்துக்கிட்டேன்..
என் பக்கத்துல வந்து டிக்கெட் போட்டுட்டு.. காலைல இப்படி எரும மாதிரி சோம்பேறியா உக்காந்துட்டு இருக்கியே.. நீலாம் காலேஜ் ல போய் என்னத்த படிச்சி கிழிக்க போற.. உன்ன படிக்க வைக்குற காசுக்கு எங்க மாமா(என்னோட அப்பா வ சொல்றார்) ஒரு 4 மாட வங்கி விட்ருந்தாலும் நாலு காசு பாத்துருக்க்கலாம்னு என்ன செல்லமா திட்டினார்..
மாம்ஸ் சும்மா இருங்க.. நாங்க நல்ல தான் படிப்போம்.. நீங்க ஒழுங்கா டிக்கெட் போடுங்க.. விட்டுட்ட உங்க மாமனார் ஆப்பு வைக்க வருவார் நு நா சொல்ல என் கன்னத்த கிள்ளிட்டு ஒரே கெக்க புக்கே நு சிரிப்பு.. பஸ் ல எல்லாரும் எங்க 2 பேரையும் ஆச்சர்யமா பாத்துட்டு இருந்தாங்க..
சரி கொஞ்சம் எந்தி.. நா இன்வாய்ஸ் போட்டுகிடுதேன் இன்னு அவர் சொன்னார்.. நானும் சரின்னு எந்திச்சு நின்னேன்.. அப்பம் எதேச்சையா பின்னாடி திரும்பி பாக்குறேன், பின்னாடி உள்ள சீட் ல ஏன் ஆளு இருக்கான்.. அவன பாத்ததும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி.. நா அவனையே வச்ச கண் வாங்காம பாத்துட்டு இருந்தேன்.. ஆனா அவன் என்ன பார்க்கல.. மனசுக்குல பார்த்த முதல் நாளே நு பாக்கிரவுண்ட் மியூசிக் வேற.. மாம்ஸ் இன்வாய்ஸ் போட்டுட்டு நீ உக்கருனு சொன்னார்.. இல்ல நீங்க உக்காருங்க நா நிக்கிறேன்னு சொல்லிட்டேன்.. மாமாவும் என் கிட்ட வந்து நின்னுகிட்டே பேசினார்.. அவரோட சீட் ல இன்னொரு ஆள் உக்காந்துட்டார்.. மாமா ஏன் கூட பேசும்போது எதாச்சு கேட்டார்னா ன்ன பதில் கொஞ்சம் குரல உயர்த்தி சொன்னேன்.. அப்போமாச்சு அவன் என்ன பாப்பநானு சொல்லித்தான்..
நா நெனைச்சது சரியாய் போச்சு நா பேசும் போது அவன் என்ன பத்து சிரிக்கிறத நா என்னோட ஓரக்கன்னால பாத்தேன்.. சரி லைட் ஆ திரும்பி பாப்போம் என்ன பண்றனு பாத்தேன் அதுக்குள்ள அவன் டக்குனு திரும்பிட்டான்.. சரி எப்படியே நம்ம மூஞ்சு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்.. ஓகே இது நம்ம காதலுக்கு முதல் படின்னு நெனைச்சிகிட்டு அன்னைக்கி காலேஜ் க்கு போனேன்..
காலேஜ் முடிஞ்சிது.. வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் வந்தேன்.. 1.45 பஸ் நின்னுது பஸ் உள்ள ஏறி உக்காந்து தூங்க ஆரம்பிச்சிட்டேன்.. பஸ் கெளம்பிடுச்சி… சரி டிக்கெட் எடுக்கனும்னு முழிச்சேன்.. என்னோட பாக்கெட் ல இருந்து 10 ரூபாய் நோட் எடுத்து கைல வச்சிட்டு பக்கத்துல திரும்பினேன்.. அப்பா எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..நம்ம ஹீரோ அங்க இருந்தான்..அதுவும் நா உக்காந்துருந்த சீட்ல.. அவன பாத்ததும் எனக்கு அப்டியே பறக்குற மாதிரி ஒரு பீலிங்க்ஸ்..எப்படியாவது அவன் கிட்ட இன்னைக்கி பேசிரனும்னு நெனைச்சிகிட்டேன்..
டிக்கெட் லாம் எடுத்து முடிச்சிட்டு.. அவன பாத்து லேசா சிரிச்சேன்.. அவனும் சிரிச்சான்.. ஹாய் நு சொல்லி என் பேரு ஜே நு சொன்னேன்.. ஹாய் நு சொல்லிட்டு என் பேரு பிரவின் நு அவன் சொன்னான்.. பிரவின் நைஸ் நேம் நு மனசுல நெனைச்சிட்டு.. ஜன்னல் ஓரமா திரும்பி பார்த்தேன்.. லேசான சூடா அடிக்கிற காற்று என்னோட முகத்துல வந்து மோதும் போது பிரவின் பிரவின் நு சொல்ற மாதிரி இருந்துச்சி..
(தொடரும்)
இத படிக்கும் போது எப்படி பீல் பண்றீங்கன்னு கண்டிப்பாக கீழே கமெண்ட் செய்யவும்..