
யாரோ என்ன தட்டி எழுப்புற மாதிரி தோணுது.. ஜே எழுந்துரு நேரம் ஆச்சு காலேஜ் போகணும்ல.. பஸ் கரெக்ட் ஆஹ் டைமுக்கு வந்துரும் எழுந்துருனு சத்தம் கேக்குது.. கண்ண தொறந்து பாத்தா எங்க அம்மா என்ன எழுப்பிகிட்டு இருக்காங்க.. காலேஜ் போறதுக்கு.. அப்போம்
இவ்ளோ நேரம் நடந்தது எல்லாம் கனவா?? லுங்கி வேற ஈரமா பிசு பிசுனு இருக்கு.. அட கருமமே கனவு கண்டு லீக் தான் ஆகிருக்கு.. பட் இந்த கனவு எப்படியும் நினைவு ஆகும்னு ஒரு நம்பிக்கை..
அந்த உற்ச்சாகத்துல எழுந்து குளிச்சி கெளம்பி பஸ் ஸ்டாண்ட் போனேன்.. எப்பவும் வழக்கமா வர பஸ் தான் வந்துச்சி.. கனவுல வந்த மாதிரி பஸ் வரல.. சரி ஓகே உள்ள பிரவின் இருக்கானான்னு பாத்தேன்.. எஸ் அவன் இருந்தான் ஆனா கண்டக்டர் சீட் ல இருந்தான்… ஓகே
உடனே நா அவன் பக்கத்துல போய் உக்காந்தேன்.. 2 பேறும் ஹாய் ஹலோ சொல்லிகிட்டோம்.. நா என்னோட தொடைல கைய வச்சிக்கிட்டு இருந்தேன்.. குண்டு குழில ஏத்தி இருக்கும் போது அவன் கைய தொட்டு கனவுல வந்த மாதிரி இவன் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணிற
வேண்டியதான் இன்னு நெனைச்சிட்டு அவன் கிட்ட பேசலாம்னு நெனைக்கும் பொது கண்டக்டர் வந்து தம்பி அதன் நெறைய சீட் இருக்குல அப்புறம் ஏன் இதுல உக்காந்துருக்க மாறி உக்காருப்பா இன்னு சொல்லிட்டார்.. இந்த ஆளு வேற சீட் ல உக்கார கூடாதான்னு
நெனைச்சிகிட்டே மாறி உக்காந்துட்டேன்.. அப்றமா நா அவனையே திரும்பி திரும்பி பாத்துகிட்டு இருந்தேன்.. ஆனா அவன் என்ன பாக்கவே இல்ல..
அன்னைய தினம் அப்டியே பாத்து பாத்து கண்கள் பூத்திருந்தேனு போயிட்டு.. சரி அதுகப்ரமாவது அவன் கிட்ட எப்படியாவது பேசிராலாம்னு பாத்தா மத்தியானமும் அவன் 1.40 பஸ் ல வரத்து இல்ல.. என்னடா இந்த பய்யன் இப்படி பண்றான் சோ சாட் இன்னு மனசுல
நெனைச்சிக்கிட்டு ஒவ்வொரு நாலா அவனுக்காக காத்திருந்தேன்.. ஒரே பஸ் ல போனாலும் 2 பேறும் பேச முடியாத நிலை ஏற்பட்டு கொண்டே இருந்தது.. ஒரு 10 நாள் போச்சு அன்னைக்கி அவன் கிட்ட உக்காந்து பேசுற டைம் கிடைச்சுது அன்னைய டேட் “ஆக்18 – 2008”..
அன்னைக்காவது பேசி லவ் அஹ சொல்லிரலாம்னு நெனைச்சேன் .. அன்னைக்கி கண்டக்டர் நம்ம குமரேசன் மாமா.. அவரும் அந்த பையன் கிட்ட ஏதேதோ விசாரிச்சிக்கிட்டு இருந்தார்.. என்னைய பிரவின் கூட பேசவே விடல.. எனக்கு கொஞ்சம் கடுப்பா தான் இருந்துச்சி..
பிரவின் இறங்குற ஸ்டாப் வந்து இறங்கி போய்ட்டான்.. இறங்கும் பொது பாய் நு சொல்லிட்டு போனான்.. ஆஹா பயபுள்ள நம்ம வழிக்கு கொஞ்சம் வாரான் இன்னு நெனைச்சி சந்தோசப்பட்டேன்..
ஜே “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..” அப்டின்னு மனச தேத்திகிட்டு நாளை மீண்டும் ட்ரை பண்ணுவோம்னு சொல்லிக்கிட்டு காலேஜ் போயிட்டேன்… மறுநாள் பஸ் வந்துச்சி ஆனா அந்த பஸ் ல பிரவின் இல்ல.. ஒரு வேல லீவ் எடுத்துருப்பான்.. நாளை வருவான்னு நம்பி
இருந்தேன்.. கிட்ட தட்ட ஒரு மாசம் ஆனது அவன் வரவே இல்ல.. அவனோட போன் நம்பர் கூட ஏன் கிட்ட கிடையாது.. அந்த டைம் ல யாரும் போன் அவ்வளவ்வா யூஸ் பண்ணினது இல்ல.. சரி எதுக்கும் குமரேசன் மாமா கிட்ட கேட்டு பாக்கலாம்.. அவன் என்ன ஆனான்னு
அவருக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு.. ஒரு நாள் அவர் கிட்ட கேட்டேன்…
மாமா பிரவின்னு ஒரு பய்யன் கவர்ன்மெண்ட் டிரைவிங் ஸ்கூல் ல படிச்சான்ல அவன் என்ன ஆனான் இன்னு கேட்டேன்..
அவன் கோர்ஸ் முடிச்சி போய்ட்டான் மாப்ள.. அவனும் எனக்கு நல்ல ப்ரெண்ட் தான் சென்னை காரன் இங்க வந்து படிச்சிட்டு சென்னை போய்ட்டான்.. ஏன் கிட்ட சொல்லிட்டு தான் போனான்.. அப்டின்னு சொன்னது என்னோட கண் ல இருந்து என்ன அறியாமையே கண்ணீர்
வந்துட்டு.. இருந்தாலும் அவர் சொல்றத என்னால முழுசா நம்ப முடியல.. சென்னை காரன் ஏன் இங்க வந்து படிக்கணும் அங்கலாம் இதே மாதிரி டிரைவிங் ஸ்கூல் இல்லையா என்ன?? அப்டி இங்க வந்து படிச்சாலும் டிரைவிங் ஸ்கூல் பக்கமா வீடு எடுத்து தங்கலாமே இவ்ளோ
தூரமா ஏன் தங்கணும் ?? இதேமாதிரி பல கேள்விகள்…
சரி அவன பத்தி நேர ஆர் டிஓ ஆபீஸ் கே போய் கேட்டு பாக்கலாம்னு அங்க போனேன்.. எனக்கு துணைக்கு என்னோட ப்ரெண்ட் ஹுசைன் ஆ கூட்டிட்டு போனேன்.. அவன் கிட்ட இந்த மாதிரி லவ் நு லாம் சொல்லல சும்மா வேற ஏதோ ரீசன் சொல்லி கூட்டிட்டு போனேன்.. ஆர்
டிஓ ஆபீசெக்கு போய் அங்க கேட் ல ஒரு ஏஜென்ட் நின்னுட்டு இருந்தான் அவன் கிட்ட பேரு பிரவின் 18 ஆகஸ்ட் ல ட்ரிவிங் முடிச்சன் அவனோட போன் நம்பர் மட்டும் கிடைக்குமான்னு கேட்டு பாத்தேன்.. கொஞ்சம் கஷ்டம் தான் அது சீக்ரெட் ஆனா டீடைல்ஸ் யாருக்கும் குடுக்க
மாட்டங்க பா.. ஆனா உனக்காக வேற ட்ரை பண்றேன் தம்பி ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு ஆகுமேன்னு இழுத்தான்.. அதுக்குள்ளே அவனுக்கு ஒரு கால் வந்துச்சு.. அப்போ நா ஹுசைன் கிட்ட கேட்டேன் டேய் என்னடா இவன் இப்படி சொல்றான்னு.. அதுக்கு அவன் டேய்
இவனுக நம்ம கிட்ட காசு புடுங்க தான் பாப்பாங்க.. அவன் கிடைக்கும்னு கன்பார்மா கூட சொல்லல.. சோ எதுக்கு ரிஸ்க் வா போய்டலாம்.. அவனுக்கு குடுக்க காசு கூட நம்ம கிட்ட கிடையாது.. இன்னு அவன் சொல்ல நானும் சரி நு அந்த ஏஜென்ட் பேசி முடிக்கிறதுக்குள
கெளம்பிட்டோம்..
நமக்கு தெரிஞ்சா ஆள் யாரும் அதிகாரத்துல இருந்தா அந்த டீடைல்ஸ் நமக்கு ஈசியா கிடைக்கும் நமக்கே கஞ்சிக்கு வழி இல்ல நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? இன்னு மனசுக்குல என்ன நானே திட்டிகிட்டு ஊருக்கு போய் சேந்துட்டேன்.. அவன் நம்மள விரும்பிருந்த
அட்லீஸ்ட் அவன் போற அன்னைக்கி போன் நம்பர் ஆவது கொடுத்துட்டு போயிருப்பான்.. அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லையோ என்னவோ??
அதுகப்ரமும் அவன் போல ஷேப் ல இருக்குற டிரைவர் யாராவது பாத்தா ஒரு வேலை அவன் பிரவீனா இருக்க கூடதன்னு ஓடி போய் அவங்க முகத்த பாப்பேன்.. இதே மாதிரி 100 டைமுக்கு மேல நடந்துச்சி.. ஆனாலும் எனக்கு கிடைச்சது ஏமாற்றமே!…
அவன பத்தி எனக்கு தெரிஞ்சதுலாம் அவன் பேரு பிரவின்.. கவெர்ன்மெண்ட் டிரைவிங் ஸ்கூல் ல படிச்சான் அவ்ளோ தான்.. மத்த படி எதுவுமே தெரியாது.. இருந்தாலும் அவனோட நெனைப்பு இன்னை வர மறக்கவே முடியாத ஒரு தழும்பா தான் இருக்கு.. இன்னும் அவனோட
முகம் என் மனசுல ஒரு போட்டோ பிரேம் மாதிரி இருக்கு.. ஆக் 18 எப்போதுமே என்னோட மறக்க முடியாத நாலா தான் இருக்கு..
இந்த கதை மூலமா நா உங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்.. யாராவது நீங்க விரும்புநீங்கனா 2 அல்லது 3 மீடிங்க்லையே அவர் உங்கள விரும்புராரனு தெரிஞ்சிகிட்டு பழகுங்க.. என்ன மாதிரி தேவை இல்லாம ஆசைய மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு கஷ்டபடாதீங்க…
இந்த கதையை பொறுமையாய் படித்ததற்கு மிக்க நன்றி..
வருத்தத்துடன் முடிக்கிறேன்..
இத படிக்கும் போது எப்படி பீல் பண்றீங்கன்னு கண்டிப்பாக கீழே கமெண்ட் செய்யவும்..